கிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்தின் ஒரு காட்சியை லாவண்யா திரிபாதி வெளியிட்டார்

 


இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி வாரு’ படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர். அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ ஹிட் பாடல்களால் பிரபலமானது. தற்போது அவரது மூன்றாவது படமான ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பார்வையாளர்களின் அன்பை பெற தயாராகிவிட்டது. ஒரு அசலான கதையுடன் அப்படம் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி இன்று வெளியிட்டுள்ளார்.

பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிக்கும் இப்படம் மாலை கண்நோயைப் பற்றியது. இன்று வெளியிடப்பட்ட அந்த காட்சியில் ஒரு தேவாலயம், இயேசுவின் புகைப்படம், மற்றும் படத்தின் ஹீரோ ஆகிய விஷயங்கள் தனித்துவமான முறையில் காட்டப்படுகின்றன. சுவாரஸ்யமான பின்னணி இசையுடன், ‘ஒரு தாயின் நீதிக்காக ஒரு தாயின் சத்தியம்’ மற்றும் ‘உண்மை என்றும் மறைவதில்லை’ உள்ளிட்ட வரிகள் காட்சியமைப்புடன் பொருந்திப் போகிறது. அந்த காட்சியின் மூலம், நாயகன் இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் தாடியுடன் தோன்றும் அதே நேரத்தில் மற்றொருவர் க்ளீன் ஷேவ் செய்த காவல் அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் கிரண் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த ஒரு கிறிஸ்துவராக நடிக்கிறார். அதனால்தான் காட்சியின் முடிவில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள், செபா’ என்ற வாக்கியம் இடம்பெறுகிறது. 

இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சாஹோ படத்துக்கு பிறகு அவர் இசையமைக்கும் நேரடி தெலுங்கு படம் இது. கதை மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்துக்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

நடிகர்கள்:

கிரண் அப்பாவரம், நம்ரதா தரேகர், கோமலி பிரசாத், ஸ்ரீகாந்த் ஐயங்கார், சூர்யா, ரோஹினி ரகுவரன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா

படக்குழு:

எழுத்து, இயக்கம்: பாலாஜி சய்யபுரெட்டி

ஒளிப்பதிவு: ராஜ் கே நல்லி

கலை இயக்கம்: கிரண் மாமிடி

எடிட்டிங்: விப்லவ் நிஷாதம்

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: எலைட் எண்டெர்டைன்மெண்ட்

இணை தயாரிப்பு: சித்தா ரெட்டி பி

தயாரிப்பாளர்கள்: ப்ரமோத், ராஜு

டிஜிட்டல் உரிமை: டிக்கெட் ஃபாக்டரி

விளம்பரம்: சவான் பிரசாத்

டிஐ: சுரேஷ் ரவி

ஒலி: சிங்க் சினிமாஸ் சச்சின் சுதாகரன்

பிஆர்ஓ: யுவராஜ்0 comments:

Pageviews