அலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்- விரைவில் திரையரங்குகளில் !

 


நவம்பர் 27 முதல் தமிழகமெங்கும் ரிலீசுக்கு தயாராக உள்ள அலர் ஸ்டுடியோஸ் வழங்கும் நேரம் &பிரேமம் பட புகழ் அனந்தநாக் மற்றும் காதல் சுகுமார் இணைந்து நடிக்கும் திருவாளர் பஞ்சாகம் படத்தினை மலர்விழி நடேசன் இயக்குகிறார் .


பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடல் துவங்கியுள்ளது இந்த சூழலில் அலர் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் திருவாளர் பஞ்சாங்கம் நவம்பர் 27 முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள்.


 திருவாளர் பஞ்சாங்கம் முழுநீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. மேலும் அனந்தநாக் மற்றும் காதல் சுகுமார் இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஊர்வசி, சுதா ,CM பாலா அறிமுக வில்லனாக கௌதம் இவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது.


ஜோதிடத்தில் மிகுந்த நாட்டமுடைய கார்த்திக் எந்த ஒரு வேலை செய்தாலும் அவனது குருவாகிய நல்ல பெருமாளின் வாக்குப்படி நடப்பதை கொள்கையாக நினைத்து வாழ்கிறான். தன் நண்பன் சீனு ஒரு கொலை பிரச்சனையில் மாட்டிக் கொள்ள அவனை காப்பாற்ற கார்த்திக் செய்யும் ஜோதிட சேட்டைகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக உருவாகியுள்ளது .அனந்தநாக் மற்றும் ஊர்வசி இணைந்து வழங்கும் காட்சிகள் நம்மை மேலும் சிரிப்பூட்டும் வகையிலும் அமைந்துள்ளது .ஆடுகளம் நரேன் வழக்கம்போல் போலீஸ் பணியை செவ்வனே செய்துள்ளார் .கதையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் தன் பங்கினை சிரிக்கும் வண்ணமாகவே சிறப்பாக வழங்கியுள்ளார்கள்.


ஜோசியம் மற்றும் ஜாதகம் இப்படத்தில் மேலும் வலிமை பெற்று உள்ளது குருவின் பார்வை திருவாளர் பஞ்சாங்கத்தின் மேல் விழும் வண்ணமாக படம் உருவாகியுள்ளது.


தொழிநுட்பக்குழு :

கதை -திரைக்கதை -இயக்கம் : மலர்விழி நடேசன்

தயாரிப்பு - மலர்விழி நடேசன்

ஒளிப்பதிவு காசி விஷ்வா ,

இசை ஜேவி

படத்தொகுப்பு நாகராஜ் AK  ,

ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு

நடனம் - Cool ஜெயந்த் & ராதிகா

பாடல்கள் -சினேகன் , செல்லமுத்து ,ஜெயா (USA )

சண்டைப்பயிற்சி -speed மோகன்

டிசைன் - சசி & சசி

மக்கள் தொடர்பு - ஆனந்த் & ரியாஸ் கே அஹ்மத்

0 comments:

Pageviews