யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy

 


திரில்லர் கதைகளுக்கு எப்பொழுதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. 

அறிமுக இயக்குனர் சுதாகர் இயக்கியிருக்கும் படம் Xzy . 


யதார்த்தமான குடும்பங்களுக்குள்

நடக்கும்  குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிக்கைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று விடுகிறோம்.


மிக சர்வ சாதாரணமாக இன்று குற்றங்கள் நம் நாட்டில் நடைபெற்றுவருகின்றன... அதிகாரங்களும், சட்டங்களும் , தண்டனைகளும் , மனித உரிமைகளும் மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.


பெரும்பாலும் குடும்பங்களுக்குள் நடக்கும் வன்முறைகளும், குற்றங்களுக்கும் சமூகமும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றது.


சமூகத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட தனிமனித வாழ்விலும், குடும்பங்களிலும் வன்முறைகளை தூண்டும் வகையில் இருந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு குடும்பத்தில் ஏற்படும் வன்முறை சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லராக எப்படி மாறுகிறது என்பதுதான் Xzy .


மிகச்சாதாரணமான குடும்பத்தில் அசாதாரணமாக நடக்கும் சிறு சம்பவமே இந்தப்படம். 

படத்தின் துவக்கம் முதல் சஸ்பென்ஸ்களோடு திரில்லர் நிறைந்த விருவிருப்பான திரைக்கதையோடு வந்திருக்கிறது Xzy .


நடிகர்கள்  - விஷ்ணு பிரியன்,  பிரியா கார்த்திகேயன், ராம் ஆகார்ஷ்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


முத்துக்குமரன் ஒளிப்பதிவில்


கதை, திரைக்கதை  எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுதாகர்.


தயாரிப்பு. சரித்தா பிக்சன் சினிமாஸ் .


படப்பிடிப்பு முடிந்து  இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் Xzy விரைவில் திறைக்கு வர இருக்கிறது.

0 comments:

Pageviews