லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது


கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முதல்வர் உத்தரவின்படி நேற்று முதல் படமாக நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் J.M.பஷீர் அவர்கள் குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் ஜெ.எம்.பஷீர் கதாநாயகனாகவும் மீனுகார்திகா, சௌந்திகா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் ராதாரவி, பவர்ஸ்டார், தாடிபாலாஜி, ஆனந்த்நபாபு, ஸ்டண்ட் மாஸ்டர் தவசிராஜ், AM.சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அந்த படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் வேலைகளுக்கு தயாரானது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக 22.3.2020 முதல் தற்போது வரை லாக்டவுன் தொடர்ந்து அமுலில் உள்ளது. தற்போது தமிழக முதல்வர் சில பணிகள் செய்து கொள்ள 11.5.2020 முதல் தளர்வுகள் அறிவித்தார். அதில் சினிமா சம்பந்தப்பட்ட அறிவிப்பாக போஸ்ட் புரோடக்ஷன் எனும் திரைப்படம் படப்பிடிப்புக்கு பின்னால் உள்ள ஸ்டுடியோ பணிகளை 5 பேர் கொண்ட டெக்னீஷியனுடன் சமூக
இடைவெளி விட்டு பணி புரிய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

சினிமா வட்டாரத்தில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதில் நேற்று  முதல் படமாக ஜெ.எம்.பஷீர் நடிக்கும் குற்றாலம் படத்தின் டப்பிங் பணி அதன் இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல் ஸ்டுடீயோவில் தொடங்கியது.

படத்தின் நாயகனான பஷீர் படத்தில் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசினார். சமூக இடைவெளி பின்பற்றபட்டு நாயகன் மற்றும் 4 நபர்களுடன் நேற்று டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 


0 comments:

Pageviews