தமிழ் திரையுலகில் வெள்ளி விழா காணும் ‘மோகமுள்’ மற்றும் ‘அபிஷேக் சங்கர்’ – வெற்றிகரமான 25 ஆண்டுகள்!


எழுத்தாளர் தி. ஜானகிராமனின் படைப்பான ‘மோகமுள்’ திரைப்பட வடிவம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அதில் அறிமுகமான அபிஷேக் சங்கருக்கும் திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது.
‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைக்கு நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர், சுமார் 25 –க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 10000 -க்கும் தொலைக்காட்சி எபிசோடுகள், மராத்தியிலும் இந்தியிலும் என 60 மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட இயக்கத்திலும் தீராத ஆர்வம் கொண்ட அபிஷேக், ஒரு திரைப்படம், 15 கார்ப்பரேட் பிலிம்ஸ், 20 குறும்படங்கள் என இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
மேலும் 650-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் தனது திறமைகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் நிலையில், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள், இந்திரா காந்தி தாமரை விருது, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, 4 மைலாப்பூர் அகாடமி விருதுகள், சிறந்த ஆல் ரவுண்ட் ரோலிங் கோப்பை ஆகியன குறிப்படத்தக்கவை.
இன்றும் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், அடங்காதே, க/பெ ரணசிங்கம், கபடதாரி, என் 4, மிருகா போன்ற படங்களில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்.

0 comments:

Pageviews