கொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றிய சசிகுமார்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். "நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதை புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார். மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

0 comments:

Pageviews