அலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்!


அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் 'திருவாளர் பஞ்சாங்கம்'. இப்படத்தில் நாயகனாக 'ஆனந்த் நாக்' நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா இசை ஜேவி மற்றும் நரேஷ் படத்தொகுப்பு நாகராஜ் ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு ஆகியோர் பணி புரிந்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் மலர்விழி நடேசன் கூறுகையில்...

இப்படத்தில் நாயகனாக 'ஆனந்த் நாக்' நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம்  மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி  தீர்த்து கொள்கிறான்.

அப்படி தீடிரென ஒரு பிரச்சினை வர, ஜாதகத்தை கடை பிடித்து அந்த பிரச்சனையில் இருந்து வெளி வருகிறானா? அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா? என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன்.  கதாநாயகனின் ஏழு நாள்கள் பயணம் தான் இப்படம்.

 இப்படம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

0 comments:

Pageviews