நிஜமான நிழல் ! சிவகார்த்திகேயனின் “கனா” கதாப்பாத்திரம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பௌச்சர் வாழ்க்கையில் நிஜமாகியிருக்கிறது !


திரையில் நாம்  காணும் காட்சிகள் நிஜ வாழ்வை மையப்படுத்தியவை தான்.  பல நேரங்களில் நிஜ உலகின் பல சம்பவங்கள்,  மனிதர்களின்  வாழ்வியல் கருவாக மாறி  திரைப்படங்களில் பிரதிபலிக்கும். ஆனால் வெகு சில நேரங்களில்  திரையில் வந்தவை நிஜமாக நடந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். நமது மொழியில் நமது பெருமையான “கனா” திரைப்படத்தின் சம்பவம் நிஜத்தில் அரங்கேறியிருக்கிறது. இணையம் முழுதும் இப்போது அந்த விசயம் தான் வைரலாகி வருகிறது. 2019 ல் கிரிக்கெட் போட்டியில்  கீப்பராக விளையாடும்போது கண்ணில் அடிபட்டதன் காரணமாக அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பௌச்சர் தற்போது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்த மாத்திரத்தில்  “கனா” படத்தில் இதே போன்று சிவகார்த்திகேயன் கதாப்பாத்திரம் கண்ணில் அடிபட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் இந்திய பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக ஆவார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை குறிப்பிட்டு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் இணையம் முழுதும் இதனை பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.

0 comments:

Pageviews