அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி சிறு படங்களுக்கு உதவ வேண்டும் - விஜயதாரணி


RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் கருத்துக்களைப் பதிவுசெய். இப்படத்தின் சாராசம்சம் செல்போன்களால் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளைப் பற்றியது. மேலும் இளைஞர்களுக்கு பல நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ள படமாகவும் உருவாகி இருக்கிறது. அதனாலே இப்படக்குழுவை தொல்.திருமாவளவன் நேரில் அழைத்து தனது  பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
ராகுல் பரமகம்சா  இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு
இணைத்தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி பேசியதாவது,

"இந்தப்படம் ஒரே நைட்டில் முடிவான படம். இந்தப்படம் இந்தளவிற்கு வந்ததற்கான காரணம் இயக்குநர் மற்றும் அவரது டீமும் தான். ஒருகாலத்தில் படம் எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. பின் படம் எடுத்துவிடலாம் ஆனால் வெளியிட முடியாது என்றார்கள். இப்போது இசை வெளியீட்டு விழா நடத்த முடியாது என்றார்கள். இது அத்தனையும் சாத்தியமானது இப்படத்தில் தான். அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி" என்றார்

இயக்குநர் ராகுல்பரமகம்சா பேசியதாவது,

"வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கருத்துக்களை பதிவுசெய் படம் தயாரிப்பாளர் சொன்னது போல ஓர் இரவில் முடிவு செய்தபடம். பட்ஜெட் என்பதை மனதில் வைத்து நாட்டுக்குத் தேவையான கருத்துள்ள படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படத்தின் இயக்குநர் மட்டும் தான் நான். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் ராஜசேகர் தான். இந்தப்படத்தில் ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. அதன்பிறகு அதைச் சரிசெய்தவர் மோகன் சார் தான். இந்தப்படத்தை சக்சஸ் புல்லா எடுக்க முடிந்ததிற்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது. இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். நாம் நிறைய படங்களை பார்க்கிறோம். அப்படங்களில் ஹீரோ என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் செய்கிறோம். அதேபோல் இப்படத்தில் நிறைய நல்ல விசயங்களை சொல்லியுள்ளோம். தயவுசெய்து அதையெல்லாம் பாலோ பண்ணுங்கள்.  இளைஞர்களை நல்வழிப்படுத்தும் இப்படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்

நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது,

"குறிப்பாக கைத்தட்டல் எல்லாம் கெஞ்சி வாங்குவது போல் ஆகிவிட்டது. ஒரே ராத்திரியில் டிசைட் ஆன படம் இது என்றார்கள். இங்கு கவர்மெண்டே ஒரே ராத்திரியில் டிசைட் ஆகிறது. இன்னைக்கு டிக்டாக்ல கொலை செய்றதை எல்லாம் போடுறாங்க. செல்போனை எந்தளவிற்கு யூஸ் பண்ணணும் என்று சொல்கிறார்கள். சினிமா என்பது பெரிய கேம். யார் என்ன கேமில் ஆடி ஜெயிக்கிறார்களோ ஜெயிக்கட்டும் அதை நாம் விமர்சனம் செய்யத்தேவையில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜின் ரசிகனாம். அதனால் தான் அவர் ஒல்லியாக இருக்கிறார் போல. பாக்கியராஜ் படங்கள் நம் வாழ்வின் விசயங்களை பதிவுசெய்தது. கருத்துக்களைப் பதிவு செய் படமும் அப்படியான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். பெரிய படங்கள் எல்லாம் இன்று எப்படியாவது தப்பித்து விடுகிறது. சின்னப்படங்கள் தான் மாட்டிக்கொள்கின்றன. ஒரு படத்தை தியேட்டரில் தான் வந்து பார்க்க வேண்டும் என்று ரசிகன் முடிவெடுக்க வேண்டும் என்றால் நம் படம் அப்படி இருக்க வேண்டும். செலவு செய்வது படத்தில் தெரியவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த எட்டரை கோடி ரூபாய் இருந்தது. இப்போது 75 லட்சம் இருந்தது. இப்போது அதையும் சர்வீஸ் டாக்ஸ் என்று பிடித்து வைத்திருக்கிறார்கள். இப்போது தயாரிப்பாளர்களுக்கு இன்சூரன்ஸ் போட வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்களால் வளர்ந்த பெரிய நடிகர்கள் எல்லாம் அதற்கு சப்போர்ட் பண்ணணும். இல்லாவிட்டால் எட்டரை கோடி ரூபாயை இல்லாமல் செய்தவர்கள் வீட்டு முன் போராட்டம் செய்ய வேண்டிய இருக்கிறது. வாழ்வில் எந்தப் பாவமும் பார்க்காத இடங்கள் மூன்று உண்டு. ஒன்று சுடுகாடு, இன்னொன்று கால்யாண வீடு. மூன்றாவது சினிமா. சினிமா எடுப்பவர்கள் டெடிகேட்டா இருங்க. அப்படி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அடுத்த வருசம் சினிமாவில் பெரிய அதிசயம் நடக்கும்" என்றார்.

தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன் பேசியதாவது,

"வெற்றியை மட்டும் அல்ல குறைகளையும் மீடியாவிடம் சொல்ல வேண்டும். இந்த சினிமாவை ரொம்ப பொத்தி பொத்தி வச்சி பலரும் இப்போது தரையைப் பார்ப்பதே இல்லை. கருத்துக்களைப் பதிவுசெய் படம் ஒரு அற்புதமான ஒரு விசயத்தை தொட்டிருக்கிறது. இன்று செல்லம் கொடுத்த வளர்த்த பெண்ணை ஒரு அப்பன் செல்போன் வாங்கி கெடுத்துள்ளான். சென்சார் போர்டு என்ற ஒன்றை வைத்து எங்களை சித்ரவதை செய்கிறார்கள். நாயை நாய் என்று சொல்லக்கூடாது என்கிறார்கள். அப்புறம் எப்படிடா சொல்ல வேண்டும். இன்று சென்சார் எங்களுக்கு இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்களே. டிவியில் சீரியல் எவ்வளவு கேவலமாக வருகிறது. அதையெல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறீர்கள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என் கருத்துக்களை நான் பதிவு செய்கிறேன். இந்தப்படம் செல்போனால் வரும் பிரச்சனைகளை பேசியுள்ளது. இன்று நம்முடைய கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை மது கெடுத்து வருகிறது. இந்த இயக்குநரை நான் தலை வணங்குகிறேன். என்னிடம் ஒரு சேனலில் இரண்டு பெரிய ஹீரோக்கள் பெயரைச் சொல்லி அந்த நடிகர்கள் கால்ஷீட்  தந்தால் படம் தயாரிப்பீர்களா? என்று கேட்டார்கள். சத்தியமாக எடுக்க மாட்டேன் என்றேன். அதற்குப் பதில் இப்படியான இளைஞர்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன். உதட்டோடு உதடு ஒட்டுவது போல் ஒரு காட்சி இப்பட ட்ரைலரில் வந்தது. ஆனால் டக்கென்று மறைத்து விட்டார். சந்தோஷம். இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் கூட ஹீரோயின் உதட்டை கிழித்துவிடுகிறார்கள். குருதிப்புனல் படம் ஹீரோயினின் உதட்டை இன்னும் காணவில்லை. இந்த இயக்குநரின் வெளிப்படையான பேசிய விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. போஸ்டர் ஒட்டுபவர்களிடம் உள்ள கட்டுப்பாடு கூட தயாரிப்பாளர்களிடம் இல்லை. இப்படத்தின் நடிகர்கள் டெக்னிஷியன்ஸ் எல்லாம் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் நல்ல கருத்துக்களை பதிவுசெய்ய வருகிறது. அது மக்களின் இல்லங்களையும் உள்ளங்களையும் கவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் " என்றார்

இயக்குநர் பாக்கியராஜ் பேசியதாவது,

"என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துக்களை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால் தான். என் இயக்குநரிடம் இந்தக்காட்சி நல்லால்லை என்று ஓப்பனாக சொல்லிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். அதுபோல் இந்தப்படத்தில் குறிப்பாக இந்த விழாவில் பெண்களை கெளரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.எல். ஏ விஜயதரணி வந்திருக்கிறார். அவர் எதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஒரே கோரிக்கை தான். எல்லாத்தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப்படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் படம் நல்லாருந்தால் நிச்சயமாக பாராட்டிவிடுவார்கள். இந்தப்பட டீம் சின்சியராக உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்காக தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை. இப்போது சினிமாவிற்கே விழிப்புணர்வு தேவைப் படுகிறது." என்றார்

சட்டமன்ற உறுப்பினர் திருமதி.விஜயதரணி அவர்கள் பேசுகையில்

சமூக சிந்தனை கொண்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன். இப்போது சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பதை எல்லோரும் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால்  தமிழ்நாடு அரசால் முன்பு தொடங்கி கைவிடபட்ட அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி திரையுலகம் பயன்படும் வகையில் அதை அமைக்க கோரி சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்ப போகிறேன். மலேசியா மற்றும் கேரளாவில் உள்ளது போல் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கட்டாயம் 15நாள் தியேட்டர்கள் தரப்படவேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் அமைச்சய் கடம்பூர்.ராஜீ அவர்களிடம் கேட்க போவதாக அறிவித்துள்ளார்.

0 comments:

Pageviews