அம்மாவும் நானும் உணவை பற்றிய தமிழ் வெப் சீரிஸ் !





தமிழில் உணவு, உணவுகளின் செய்முறை , பழமையான உணவுகளின் நினைவுகள், பழங்கால  உணவு பழக்கங்கள், ஆகியவற்றை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பிரபல உணவு ஆராய்சியாளரும் , மிகச்சிறந்த செஃப்புமாகிய ராகேஷ் ரோஷன் தொகுத்து வழங்க “அம்மாவும் நானும்” எனும் பெயரில்  வெப் சீரிஸ் ஒன்று உருவாகியுள்ளது.  உணவு  தயாரிக்கும் துறையில் மிகவும் பிரபலமாக விளங்குபவர் ராகேஷ். உணவு பற்றிய நிகழ்ச்சிகளான Dakshin Diaries for Living Foodz மற்றும்  News 7 தொலைக்காட்சியின் சுற்றலாம் சுவைக்கலாம் எனும்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பெரும் ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர். இப்போது “அம்மாவும் நானும்” எனும் வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களை இணையம் வழி மகிழ்விக்க  வருகிறார்.

“அம்மாவும் நானும்” சீரிஸ் வெகு எளிதான ஒன்றை அடிப்படையாக கொண்டது. உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு உணவின்  பின்னும்   எப்போதும் ஒரு கதை இருக்கிறது. எமோஷன் இருக்கிறது. அது நமது அம்மாக்களை, பாட்டிகளை அவர்களது வாழ்க்கையை சொல்வதாய் இருக்கும். இந்தக்கதையினை ஒவ்வொரு உணவின் உருவாக்கத்தை மீட்டெடுப்பது தான் இந்த ஷோ.

முதல் சீசன் ராகேஷின் அம்மா  அவர் பரம்பரையின் வழியே  சந்ததிகளுக்கு  கடத்தப்பட்ட  12 முக்கியமான உணவுகளின் செய்முறையை நினைவு கூறுவதாக இருக்கும். இந்நிகழ்ச்சியை  ராகேஷ் உடன் அதிதி ரவீந்தரநாத் இணைந்து உருவாக்கியுள்ளார். திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பில் பெரும் அனுபவமிக்க அவர் இந்நிகழ்ச்சியில் இணைந்திருப்பது நிகழ்ச்சிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு இசையமைத்துள்ளார் ஸ்டாக்கட்டோ.
இந்நிகழ்ச்சி உணவின் மூலம் அன்பை பரிமாறும் ஒவ்வொரு அம்மாவின் உணவின் கதைக்கும் அம்மாக்களுக்கும் அர்ப்பணிப்பாக இருக்கும். இந்நிகழ்ச்சியின் டிஜிட்டல் பங்குதாரராக Trend Loud நிறுவனம் இணைந்துள்ளது. இணையத்தில் பிரபலமான ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் மீட்டர் நிகழ்ச்சிகளின் டிஜிட்டல் பங்குதாரராக இந்நிறுவனம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் முதல் பகுதி  ராகேஷ் ரகுநாதனின் அதிகாரப்பூர்வ YouTube தளத்தில் அக்டோபர் 21 மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை வழங்குபவர் ELGI ULTRA

இந்நிகழ்ச்சியின் தொழில் நுட்ப கலைஞர்கள்

தாயாரிப்பாளர் - ராகேஷ் ரகுநாதன்

தயாரிப்பு உருவாக்கம் - அதிதி ரவீந்தரன்

இயக்கம் - ராகுல் கிருஷ்ணமூர்த்தி

ஒளிப்பதிவு - சூர்யா பாலாஜி

இசை - ஸ்டாக்கட்டோ

எடிட்டிங் - பிரகாஷ் லக்‌ஷ்மணன்

க்ரியேட்டிவ் ஹெட் - ஜெய்தனாஸ்

பப்ளிசிட்டி டிசைன்ஸ் - கண்ணன் சுந்தர்

டைட்டில் டிசைன்ஸ் - எட்வின்

வழங்குபவர் - ELGI ULTRA

0 comments:

Pageviews