உதயநிதி ஸ்டாலின் மிஷ்கின் இணைந்த 'சைக்கோ' படத்தின் டீஸருக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பு!


மிரட்டலான 'சைக்கோ' டீஸர், தவிர்க்கவே முடியாத வகையில் அதி பயங்கர ஜூரம்போல் இடையறாமல் யுடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி வருகிறது.  தனக்கேயுரிய பாணியில் காட்சிகளை அமைத்து தரும் இயக்குநர் மிஷ்கின் தற்போது 'சைக்கோ' டீசருடன் களம் காணத் தயாராகி விட்டார். நேற்று மாலை வெளியான சைக்கோ டீஸர் சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்திருக்கிறது.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறுகையில், இந்த டீஸர் அடைந்திருக்கும் வெற்றிக்குக் காரணம் மிஷ்கின் சார்தான்.   டீஸரில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக கணித்து நம்பிக்கையுடன் கொடுத்தார். ஒட்டுமொத்த எங்கள் குழுவும் டீஸர் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். டீஸரைப் பார்ப்பவர்கள் வெறும் லைக் கொடுப்பதுடனோ, பகிர்ந்துகொள்வதுடனோ நின்று விடாமல், தங்கள் கருத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தனித்தன்மை மிக்க விதிவிலக்கான படைப்புகள் எப்போது வந்தாலும் வரவேற்பு பெறும் என்பதைத்தான் 'சைக்கோ' டீஸர் நிரூபித்திருக்கிறது
'சைக்கோ' படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் தங்கள் புலனாய்வை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டனர். 'சைக்கோ' படம் வெளியாகும்வரை இந்தப் புலனாய்வு தொடரட்டும் என்று புன்னகையுடன் தெரிவித்தார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.

உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதிரி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் 'சைக்கோ' படத்துக்கு மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் இளையராஜாவின் பின்னணி இசை சைக்கோ படத்தின் சிறப்பம்சம் என்றே சொல்லலாம்.

0 comments:

Pageviews