பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் "காவி ஆவி நடுவுல தேவி"


யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து  கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி" .

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. கதாநாயகனாக ராம் சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். சிவசங்கர் . வேல்சிவா.ரிஷா.சிவகாமி, வாணி. டக்ளாராமு இன்னும் பலர் நடிக்கின்றனர்.


"காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் வந்து நகைச்சுவையை அள்ளி தெளித்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரனும், அவருக்கு துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் மேலும்கலக்கும் தம்பி ராமையா வரும் காட்சிகள் அனைத்தும் அதிரடி காமெடியாக இருக்கும் என்கிறார் இப் படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன் .

சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும் . வி.சி.குகநாதன் கதையையும் . ஒளிப்பதிவை கணேசனும். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும் | பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர்.தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணனும், மேற்பார்வையை ஜெ.துரையும் கவனித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வர உள்ளது." காவி ஆவி நடுவுல தேவி" .
படத்தின் வசனம் எழுதி புகழ்மணி இயக்கி உள்ளார்.

0 comments:

Pageviews