நடிகர் ஜெய்வந்த் நற்பணி இயக்க நிர்வாகிகள் அறிமுக - ஆலோசனை கூட்டம்


நடிகரும், சமூக ஆர்வலருமான ஜெய்வந்த், தனது மனிதநேய நடவடிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும்  வகையில், 'அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தை (பதிவு எண்: 328/2019) தனது தந்தை திரு. வெங்கட் அவர்களின் திருக்கரத்தால் துவக்கியிருக்கிறார்.

தனது துறை சார்ந்த மனித நேய முன்னெடுப்புகள் மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் என சமூக அக்கறையோடு தன்னலமற்ற செயல்பாட்டின் மூலமும் மக்கள் மனதில் வேகமாக இடம் பிடித்து வரும் இவர், தற்போது அதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.

நேற்று வளசரவாக்கம் ஈஸ்வரி மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசும் போது, 'இந்த இயக்கத்தின் நோக்கம் என்னுடைய பல்வேறு மனிதநேய நடவடிக்கைகள், ஒத்த கருத்துடைய நண்பர்கள் - சமூக ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து தன்னலமற்ற மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்பதே.  இது ஒரு நெடுந்தூர பயணம். இதன் முக்கியத்துவம் கருதி, சம்பத்குமார்  தலைமை ஒருங்கிணைப்பாளராக முழு நேரமும் செயலாற்றுவார்.  தன்னலமற்ற மக்கள் தொண்டாற்ற அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்' என்றார்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த இயக்க பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன்னலமற்ற மக்கள் பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சம்பத்குமார் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவு பெற்றது.

0 comments:

Pageviews