அஜீஸ் இசை அமைக்கும் சர்பத்


7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.

2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய இதுவரை பாடல் இதுவரைக்கும் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. குரலில் மெஸ்மரிசம் பண்ணும் அஜீஸ் இப்போது தன் இசை விரலாலும் கலக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் படத்தில் 5  பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்.  வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், "இசை தான் என் ஜீவன்" என்கிறார். மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசை அமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு மிகப்பிரபலமான இசை அமைப்பாளாராக பரிணாமம் அடைவார் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 5 பாடல்களில் ஒரு பாடல் ப்ராப்பரான  திருவிழா பாடலாம். ஒரு பிரண்ட்ஷிப் பாடல் இரண்டு மெலடி பாடல் என வெரைட்டியாக பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருப்பதாக சொல்லும் அஜீஸ், படத்தின் கதையும் கதைக்கு ஏற்ற பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாக கூடுதல் தகவலையும் சொன்னார். அஜீஸுக்கு பள்ளிப் படிப்பின் போதே இசை மீது தீராக்காதல் இருந்ததாம்.  இண்டிபெண்டண்ட் இசையில் பெரிய நாட்டத்தோடு இருந்துள்ள இவர் பல்வேறு குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இசை ஆல்பங்களாலும் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இனி பல பெரும் படங்களில் அஜீஸுன் இசைப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம்

0 comments:

Pageviews