விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது


பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து  சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம்  " ராஜ வம்சம் " .இது  T. D ராஜாவின் மூன்றாவது  படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்
இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு - ராஜா சஞ்சய் .

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .
இதர நடிகை - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழிநுட்பக்குழு : 

இயக்கம் - ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு - T D ராஜா,
இணைத்தயாரிப்பு - ராஜா சஞ்சய்,
இசை - ஜோகன்,
ஒளிப்பதிவு - N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு - ரியாஸ் கே அஹமது.

0 comments:

Pageviews