A1 திரை விமர்சனம் & ரேட்டிங்


ஜான்சன் இயக்கத்தில், சந்தானம், தாரா ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் “A1(அக்யுஸ்ட் நம்பர் ஒன்)”.

நகர்ப்புற ஏழை வட்டாரத்தில் வேலையில்லாமல், ஜாலியாக சுற்றி திரியும் பையன் சரவணன் (சந்தானம்). ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் திவ்யாவை, (தாரா) ரவுடிகளிடமிருந்து சந்தானம் காப்பாற்றுகிறார். சந்தானம், நாமம் போட்டுஇருப்பதால் அய்யங்கார் என்று நினைத்து, திவ்யா சந்தானத்தை காதலிக்கிறார். மறுநாளே சந்தானம் யார் என்று தெரிந்ததும் பிரேக் அப் செய்கிறார்.

இதையடுத்து திவ்யாவின் தந்தை உயிரை காப்பாற்றும் சந்தானத்தின் மேல் மீண்டும் காதல் மலர்கிறது. பின்னர் பெண்கேட்டு வரும் சந்தானத்தின் குடும்பத்தினரை, திவ்யாவின் தந்தை அவமானப்படுத்தி அனுப்புகிறார். இதனால் குடித்து மனம்வருந்தும் சந்தானத்திற்காக, அவரது நண்பர்கள் விபரீத செயல்களை செய்துவிடுகின்றனர். அதனால் வரும் பிரச்சனைகளை சந்தானம் எப்படி சமாளிக்கிறார் என்பதே மீதமுள்ள கதை.

இப்படம் நாம் பார்த்த பழமையானா கதை என்றாலும், சந்தானத்தின் நடிப்பு மற்றும் கவுண்டர்கள் படத்தை உயர்த்துகிறது . கதாநாயகி தாராவின் நடிப்பு குறைவாகவேயுள்ளது. இப்படத்தில் டைகர் தங்கதுரை ,லொள்ளு சபா மனோகர், எம்எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்துள்ளதால் படம் முழுவதும் நகைச்சுவையாக உள்ளது. இப்படத்தில் சந்தோஷ் நாராயணின் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும், இசையை ஓரளவு கொடுத்திருக்கிறார். படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளது. படத்தில் உள்ள காமெடி காட்சிகள் சிரிக்க முடிகிறது.

Rating - 3/5

0 comments:

Pageviews