காதல் முன்னேற்ற கழகம் ஜூலை 5 ம் தேதி உலமெங்கும் வெளியாகிறது


ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விபாண்டியராஜன்   கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு -  ஹாரிஸ் கிருஷ்ணன்

இசை   -  பி.சி.சிவன்

பாடல்கள் -   யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்கசத்யா

எடிட்டிங்  -    சுரேஷ் அர்ஸ்

நடனம்   -    அசோக்ராஜா

சண்டை பயிற்சி   -    அம்ரீன் பக்கர்

கலை  -    பிரகதீஸ்வரன்

தயாரிப்பு நிர்வாகம்   -    முத்தையா,விஜயகுமார்.

மக்கள் தொடர்பு  -  மௌனம்ரவி

தயாரிப்பு -   மலர்க்கொடி முருகன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  மாணிக்க சத்யா.

படம் பற்றி இயக்குநர் மாணிக்க  சத்யா பேசும்போது...                                                                                             

“இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை.  கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.

அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்.

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம்.  படம் ஜூலை 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது  என்றார் இயக்குனர் மாணிக்க சத்யா.

0 comments:

Pageviews