கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி


"போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது" என்ற அளவில் யோகிபாபுவின் கொடி கோடம்பாக்கத்தில் பட்டொளி வீசிப்பறக்கிறது. யோகிபாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள் வெற்றிபெற்று வரும் நிலையில், யோகிபாபுவை முழுக்க முழுக்க கதையில் புகுத்தி படத்தையே வேறோர் காமெடி தளத்தில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்ராஜன். R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள "கடலை போட ஒரு பொண்ணு வேணும்"  படத்தை வேகமாக எடுத்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது,
"யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப்படம் காட்டும். வழக்கமாக படங்களில் காமெடியை தொழிலாகப் பண்ணும் யோகிபாபுவைப் பார்த்திருக்கிறோம். இந்தப்படத்தில் யோகிபாபு பண்ணும் தொழிலே பக்கா காமெடியாக இருக்கும்.
யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப்பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார் என்பது தான் படத்தின் ஹை பாயிண்ட் காமெடி. கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும்  ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு பிதுங்கும். முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப்படம்  கமர்சியலாக பெரிய வெற்றிபெறும். அதற்கான எல்லா சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குநர் ஆனந்த்ராஜன். இவர் நேர்த்தியான இயக்குநர் என பெயர்பெற்ற சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

படத்தில் யோகிபாபு  பெரிய பில்லர் என்றால், ஹீரோ அசார் பெரிய எனர்ஜி.  சின்னத்திரை மூலமாக மக்களை மகிழ்வித்த அசாருக்கு இப்படம் பெரிய திரையில் நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும் என்கிறார்கள். மேலும் படத்தில் சாஜித், மன்சூர் அலிகான், செந்தில், சுவாமிநாதன், தீனா, மனோகர், காஜல், மற்றும் பலர் நடித்துள்ளனர். இனியன் J.ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜீபின் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விரைவில் நடைபெற இருக்கிறது.

0 comments:

Pageviews