இயக்குனர் நவீன் என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு நான் ஏமாற்றுவதாக கூறுகிறார் தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன்


நான் சொர்ணா சேதுராமன் தயாரிப்பாளர் எனது Flash Films  என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது “ மூடர்கூடம் “ நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் 45 லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம்   போட்டு அதன் படி நடந்து கொள்வதாக கூறினார்.

ஆனால் ஒப்பந்தத்தின் படி எந்த வகையிலும் நடக்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார். சுமார் 10 மதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால்  படத்தை முடித்து கொடுப்பதாக கூறினார். அவரது அனைத்து செலவுகளும் எனது தயாரிப்பு  அலுவலகம்  மூலமாகவே செய்யப்பட்டது.

நான் இதன் பிறகு 27.04.2017 ல்  தயாரிப்பாளர் சங்கத்தில் முறையா  புகார் கொடுத்தேன்  அப்போது பல முறை அழைத்தும் நவீன் வரவில்லை. கடைசியாக ஒருநாள் வந்து விரைவில் பணத்தை திருப்பி தருவதாக கூறிவிட்டு அதன் பிறகு தொடர்பு  கொள்ளவில்லை. நவீன் மூடர்கூடம் என்னும் ஒருபடம் மட்டும்  தான் எடுத்துள்ளார். மற்றபடி ஏற்கனவே கொளஞ்சி என்ற படம் எடுத்து 2 வருடங்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அந்த  தயாரிப்பாளரையும் ஏமாற்றியுள்ளதாக கேள்விப்பட்டேன்.

நான் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட பட விஷயமாக கோர்டில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். சட்டப்படி கோர்டில் சந்திப்பதை விட்டுவிட்டு அறிக்கை கொடுத்து ஊடகத்தின் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி திசை திருப்பி இதிலிருந்து விடுபட  திட்டமிடுகிறார். ஏற்கனவே பல புகார்கள் அவர்மேல் இருப்பதாக அறிகிறேன். என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு லொகேஷன்  பார்க்க போனதாக கதை சொல்லி ஏமாற்றுகிறார்.

 நான் சட்டபூர்வமாகதான் செயல்படுகிறேன். அதை அவரும் சட்டபூர்வமாக சந்திப்பதை விட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக இது போன்ற போலியான  குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் ஏமாற்றுவதாக கூறுகிறார். 

                                                             

                                                                                             இப்படிக்கு

                                                                                     சொர்ணா சேதுராமன்

                                                                                           Flash Films

0 comments:

Pageviews