முதன்முறையாக விமான பயணம் செய்பவர்களுக்கு சலுகை வழங்கும் லா அலெக்ரியா


குடும்ப உறுப்பினர்களுடன் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை bநாடுகளுக்கு விமானத்தில் சுற்றுலாச் சென்று வருவதற்குரிய கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் புதிய வசதியை பிரபலமானசுற்றுலாபயண ஏற்பட்டாளர்களான லா அலெக்ரியா (La Alegria) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் கோடைவிடுமுறையில் தங்களது வெளிநாட்டு பயணத்திற்காக பதிவு செய்பவர்களுக்கு பரிசும் வழங்கவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமைசெயலதிகாரியான திரு சிவமுருகன் பேசுகையில்,“கடந்த மூன்றாண்டு காலமாக எங்களது நிறுவனம் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, தாயகம் திரும்பும் பயண ஏற்பாட்டாளராக பணியாற்றி வருகிறோம். ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சர்வதேச அளவிலான விமான பயண சேவையை அளித்து வருகிறோம். தற்போதும் மாதந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்புடன் தாயத்திற்கு திரும்ப அழைத்து வருகிறோம்.

தற்போதைய தலைமுறை மாணவர்கள் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போது அவர் தம் பெற்றோர்களிடம் இந்த விடுமுறையை எந்த நாட்டில் கழிக்கவிருக்கிறோம்? என்று கேட்பது இயல்பாகிவிட்டது. இந்த ஆண்டு எங்களது தந்தையார் சிங்கப்பூர் அழைத்துச் செல்வார். கடந்த ஆண்டு நாங்கள் இலங்கை சென்று வந்தோம். இந்த முறை நாங்கள் தாய்லாந்து செல்லவிருக்கிறோம் என சொல்வதையும் கேட்கலாம்.

அதேபோல் உளவியல் வல்லுநர்களும், மனவள ஆலோசகர்களும் கோடைவிடுமுறையில் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தால் மனசோர்வு, மன அழுத்தம் நீங்கி உற்சாகமும், புத்துணர்வும் கிடைக்கும் என்கிறார்கள்  இதனைக் கருத்தில் கொண்டே எங்களது நிறுவனம், தற்போது பல சலுகைகளை வழங்க திட்டமிட்டிருக்கிறது. நாங்கள் நடுத்தர மக்கள் மற்றும் உயர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்க தயாராகவும்,ஆர்வமாகவும் இருக்கிறோம். இவர்களை மையப்படுத்தித் தான் நாங்கள் பல சலுகைகளை அறிவித்திருக்கிறோம்.

அந்த வகையில் தற்போது நாங்கள் ஏப்ரல் 19ம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர்,மலேசியா ஆகிய நான்கு நாடுகளுக்கும், இந்தியாவில் கோவா, டெல்லி உள்ளிட்டபல இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று வருகிறோம். இந்த நாடுகளுக்கு குறிப்பிட்ட தேதிகளில் பத்து குழுக்களாக சென்று வருவதற்கு பயணத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறோம்.

தங்களது வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பயணம் செய்து, வெளிநாடுகளுக்கு சுற்றுலாச் சென்று திரும்பவேண்டும் என்ற எண்ணமுடையவர்களை ஊக்குவிப்பதற்காக பல சலுகைகளையும் வழங்கவிருக்கிறோம். ஏனெனில் இத்தகைய பயண அனுபவம் என்பது முற்றிலும் வித்தியாசமான மகிழ்ச்சியான உற்சாகமான அனுபவமாக இருக்கும் என்பதை அவர்களும் உணரவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

 நாங்கள் இந்த கோடைகாலத்தில் சிறப்பு சலுகையாக அறிவிருக்கும் இந்த பத்து பயண திட்டங்களை விவரிப்பதாகவும், வெளிநாட்டுச் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் நாங்கள் கலந்து கொண்டிருக்கிறோம். அங்கு அமைக்கப்பட்ட எங்களுடைய நிறுவன ஸ்டால்களிலும், மக்களுக்கு தேவையான விவரங்களை தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 எங்களிடம் சுற்றுலாப் பயணியாகச் செல்வதற்கு பதிவு செய்துகொள்ளும் மக்களுக்கு ஏனைய பயண ஏற்பாட்டாளர்களை விட சிறந்த முறையில் சேவை அளிக்க தயாராக இருக்கிறோம். எங்களுடைய குழுவில் சுற்றுலா குறித்த முழு தகுதியுள்ள ஊழியர்களும், வழிகாட்டிகளும், வாகன ஓட்டுநர்களும் உள்ளனர்.

வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, நாங்கள் அங்கு உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் அழைத்துச் சென்று காண்பிப்பதில் தனித்துவமான திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். அத்துடன் நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தில் அனைத்து சேவைகளுக்கும் அடங்கும். நாங்கள் ஏனைய பயண ஏற்பாடு நிறுவனங்களைப் போல மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பதில்லை. சுற்றுலா பயணிகளை சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சுற்றுலாவிற்காக கிளம்பி சென்று, மீண்டும் சென்னை விமான நிலையம் திரும்பும்வரை அனைத்து செலவுகளுக்கும் (உணவு,  தங்குமிடம் உள்பட) அனைத்தும் அடங்கும்.

 அதே போல் பயணத்திற்கான கட்டணத்தை ஒரே தவணையாகவோ அல்லது நாங்கள் நிர்ணயித்திருக்கும் தவணைகளிலோ செலுத்தி உங்களது பயணத்திட்டத்தை இறுதியாக்கிக் கொள்ளலாம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதியான சிலருக்கு தனியார் நிதி நிறுவனம் மூலம் வெளிநாட்டு சுற்றுலாவிற்குரிய கடனுதவியையும் ஏற்பாடு செய்து தருகிறோம்.இது தொடர்பான விவரங்களை அறிய எங்களது இணைய தள முகவரியில்தொடர்பு கொள்ளலாம்.

 சுற்றுலாவை பொறுத்தவரை அதில் வெளிநாட்டு சுற்றுலாவை பொருத்தவரை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று பெற விரும்புவர்கள், அதேபோல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குழுவாக சென்று வரவும் திட்டமிடுவார்கள்.

வெளிநாட்டு சுற்றுலாவை திட்டமிடும்போது, சென்று திரும்பி வந்த பிறகு கடன் சுமை மனதில் ஏற்பட்டால், சென்று வந்த பயண அனுபவம் மகிழ்ச்சியை தராமல் கசப்பை ஏற்படுத்தி விடும். அதனால் நாங்கள் எங்களுடைய பயணதிட்டத்தை முறையான நிதி ஆதாரத்துடன் வடிவமைத்திருக்கிறோம். அதே போல் நாங்கள் நிதி திட்டமிடலையும் வடிவமைத்திருக்கிறோம். இதற்காக மாதந்தோறும் 4, 999 ரூபாய் தவணை முறையில் செலுத்தி வந்தால், கட்டணத் தொகை பூர்த்தியானவுடன், அவர்கள் வெளிநாட்டு சுற்றுலா சென்று வருவதற்கு உரிய அனுபவத்தை பெற தயாராகிறார்கள்.

இது சென்னை போன்ற மாநகரத்தை கடந்து தமிழகத்தில் உள்ள சிறிய நகரங்களில் இன்றும் விமான பயணத்தை மேற்கொண்டிராத மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த திட்டம். அமையவிருக்கும் திட்டம். இவர்களைப் போன்றவர்களை நாங்கள் அழைத்துச் செல்லும்போது உண்மையான சந்தோசத்தை அனுபவிப்பதுடன், அவர்களுக்கு சேவை செய்வதிலும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

தவணை முறையில் கட்டணம் செலுத்தி வெளிநாடுகளுக்கு சென்று வரும் சுற்றுலா திட்டத்தை நாங்கள் மட்டும்தான் அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதை பெருமிதத்துடனும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.


நீங்கள் பயணிக்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா திட்டத்தைப் பொறுத்து அதற்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தி பயன்பெறலாம். அந்த வகையில் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வரவேண்டும் என்றால், நபர் ஒருவருக்கு 5000 வீதம் 15 மாத தவணை முறையில் பணம் செலுத்த வேண்டியதிருக்கும்.அத்துடன் நாங்கள் தவணை முறையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு ஊக்குவிப்பதற்காக சில பரிசுகளையும் சலுகைகளையும் அறிவித்திருக்கிறோம். 

0 comments:

Pageviews