நடிகை சாக்ஷி அகர்வால் தொடங்கி வைத்த கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி


ரஜினிகாந்த் நடித்த காலா, தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால், சென்னை கலாசேத்திரா பவுண்டேஷன் வளாகத்தில் ‘ராஜஸ்தான் கிராமின் மேளா ’ என்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

தொடங்கி வைத்து நடிகை சாக்ஷி அகர்வால் பேசுகையில்,“ இந்த கண்காட்சியில் ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைத்தறி கலைஞர்கள் உற்பத்தி செய்த கைத்தறி துணைவகைகள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள் நேரடியாக இங்கு விற்பனைக்காக வைத்துள்ளனர். இங்கு கைத்தறி புடவைகள், ஆடை அணிகலன்கள், கைவினைப் பொருட்கள், வீட்டின் வரவேற்பறை மற்றும் உள் அலங்காரத்திற்கு தேவையான அனைத்து அலங்காரப் பொருட்களும் இங்கு இருக்கிறது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை பத்து நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் பலம். ஆகையால் மக்கள் அனைவரும் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து, தங்களுக்கு பிடித்த கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்கி,பழங்குடி மக்கள் மற்றும்இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இந்த கண்காட்சியில் ஒருங்கிணைப்பாளரான மகாவீர் பேசுகையில்,“ ராஜஸ்தான் மாநில அரசின் ஆதரவுடனும், ஒருங்கிணைப்புடனும் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் ஆதரவுடனும் நடைபெறுகிறது. இங்கு 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருக்கின்றன. இந்தியாவிலுள்ள பத்தொன்பதிற்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட கலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டின் உள் அலங்காரம் மற்றும் வரவேற்பறையில் வைக்கக்கூடிய கண்கவர் கலை பொருட்கள் என அனைத்து வகையான கலைப்பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. உங்களுடைய கைவினை மற்றும் கைத்தறி பொருட்களின் தேவை ஒரே இடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பது இந்த கண்காட்சியின் சிறப்பம்சம். பொருட்களின் விலை ஏனைய ஷோரூம்கள் விலையைவிட 40% குறைவு. பொருட்களை உற்பத்தி செய்யும் கலைஞர்களிடமிருந்து நேரடியாக சேகரித்து கண்காட்சியில் இடம்பெறுதால் இதனை சாத்தியப்படுத்த முடிகிறது.

பித்தளை, பிளாக்மெட்டல், சாரங்புர் வுட், சீஸம் மரம் மற்றும் காஷ்மீர் வால்நட் வுட் ஆகிய மரங்களைக்கொண்டுஉருவாக்கப்பட்டகைவினைப் பொருள்கள், மரத்தில் குடையப்பட்ட அழகிய வேலைப்பாடமைந்த கைவினைப் பொருட்கள், ஐரீன் ஃபர்னிச்சர்ஸ், குழந்தைகள் விளையாடுவதற்கான சென்னப்பட்டனா டாய்ஸ் எனப்படும் பொம்மைகள், மரபொம்மைகள், சிலைகள் என ஏராளமான கைவினைப் பொருள்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன.



எண்பதிற்கும் மேற்பட்ட ஸ்டால்களில் கைத்தறி துணி வகைகள், தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரையுள்ள பல மாநிலங்களிலிருந்து இடம்பெற்றிருக்கின்றன.மதுரை சுங்குடி சேலைகள், லக்னோ சிக்கன்,கலம்காரி, போச்சம் பள்ளி என எண்ணற்ற ரக புடவைகளும் இங்கு இடம்பெற்றிருக்கின்றன. டோக்ரா பழங்குடியின மக்களின் கைவண்ணத்தில் உருவான அணிகலன்கள் காண்போரை கவரும். ஆக்ராவிலிருந்து மார்பில் கற்களில் குடையப்பட்ட கைவினைப் பொருட்கள், மரத்தினால்  குடையப்பட்ட கைவினைப் பொருட்கள், சௌரா என்ற பழங்குடி மக்களின் பாரம்பரியமான இயற்கை வண்ணத்தை கொண்ட துணி ஓவியங்கள் என பல வகையானவை பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும். கைவினை கலைப்பொருட்களின் கண்காட்சி ஏப்ரல் 11ம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை, காலை பத்து மணி முதல் இரவு 9மணி வரை சென்னை கலாசேத்திரா பவுண்டேஷனின் வளாகத்தில் நடைபெறுகிறது.” என்றார்.

0 comments:

Pageviews