சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்...இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.
இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்...
எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன்.
இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப் படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்..
ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர்
இசை - இளையராஜா
பாடல்கள் - பழனிபாரதி, ஜெய்ராம்
கலை - மிலன்
ஸ்டண்ட் - அனல் அரசு
எடிட்டிங் - புவன் சந்திரசேகர்
நடனம் - பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை - ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு - கெளசல்யா ராணி
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது...
0 comments:
Post a Comment