புதியதோர் உலகம் செய்வோம் - விமர்சனம்
சூப்பர் சிங்கர் புகழ் அஜீத், அணு, யாழினி, பிரவீன் நான்கு சிறுவர்கள் நல்ல குரல் வளம் கொண்ட பாடகர்களாக இருக்கின்றனர், இவர்களது குடும்பங்களில் நடக்கும் அநியாயங்களும் போராட்டங்களும் அதை சிறுவர்கள் எப்படி எதிர்கொல்கின்றனர் என்பதே படத்தின் மைய கதை.
ஆஜீதின் தந்தையும், பிரவீன் அவர்களின் தந்தை அரசு அதிகாரியாகவும், போலீஸ் அதிகாரியாகவும் இருந்துகொண்டு லஞ்சம் வாங்கி வாழ்க்கையை நடத்துகின்றனர். இதில் அணுவின் தந்தை சின்சியரான அதிகாரியாக இருப்பவர் சின்சியராக இருப்பதனால் கால் இழந்தவராக இருக்கிகார். லஞ்சம் வாங்கும் பெற்றோரை எப்படி திருத்துகிறார்கள், சின்சியராக இருக்கும் தந்தைக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று துடிக்கின்றனர். இமான் அண்ணாச்சியின் உதவியுடன் எப்படி எல்லாம் இதை நடத்தி காட்டுகின்றனர் என்பதே மீதி கதை ஆகும்.
நான்கு சிறுவர்களும் தங்கள் கதாபாத்திரங்களை நான்றாக ஏற்று நடித்திருக்கின்றனர். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி தான் வரும் அனைத்து காட்சிகளிலும் ரசிகர்களை சிந்திக்க வைப்பதோடு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஒரு நல்ல கருத்தையும் வலியுறுத்திருக்கிறார்.
இயக்குனர் பி.நித்தியானந்தம், அனைவரும் கமர்ஷியல் கதைகளை எடுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு நல்ல வழுவான, முக்கியமான கருத்தை வைத்து படம் எடுத்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் கமர்ஷியலை சேர்க்காமல் படக்த்தை கதையோடு சேர்த்து நகர்த்தி செண்டிருக்கிறார்.
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் இமான் அண்ணாச்சியின் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவை கலந்தும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன.
படத்தின் பக்கபலமாக இருப்பது படத்தின் இசை, பிரவின் சைவியின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர். பின்னணி இசையும் நன்றாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா – விஸ்வநாதன் மற்றும் படத்தொகுப்பாளர் உதயசங்கர் தங்கள் வேலையில் நல்ல தரத்தை கொடுத்துள்ளனர்.
ஸ்ரீதேஜு பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ஜெயகுமார், திருமதி கே.என். சூரியகலா ஒரு நல்ல படத்தினை கொடுத்திருகிறார் தயாரிப்பாளர்.











0 comments:
Post a Comment