ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழா


மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழா நடந்தது. சாய்ராம் கல்வி குழும நிறுவன தலைவர் லியோ முத்து தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து, செயலாளர் எம்.வாசு, கல்லூரி முதன்மை ஆலோசகர் சீதாராமன், முதல்வர் சி.வி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் முனைவர் எஸ்.எஸ்.மந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,103 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்கினார்.

விழாவில் இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் மந்தா பேசியதாவது:-

இன்றைய சூழலில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார மந்தம், தொழில் மந்த நிலை, திட்டமிடுதல் இல்லாதது போன்றவைகளால் இன்றைய உலகம் தள்ளாடுகிறது. தொழில்நுட்ப அறிவு மூலமே இதை சரிசெய்ய முடியும். உள்நாட்டு உற்பத்தி, தொழில்வளம், முன்னேற்றம் உயர் கல்வியை பொறுத்தே அமைகிறது.
இன்றைய நிலையில் பெரும்பாலான பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் உயர்கல்வி பெற இயலாத நிலை அதிகரித்து வருகிறது. அந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடுத்த 20 ஆண்டுகளில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்ட வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் தங்களது மதிப்பு என்னவென்று தெரிந்து கொண்டு தாய்நாட்டின் தரத்தை உயர்த்துவதற்கு, தங்களது அறிவின் மூலம், இந்தியாவில் தொழிநுட்ப புரட்சியை கொண்டு வந்து, நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உண்மையான உழைப்பு, நேர்மை மற்றும் வியூக ஆற்றலுடன் செயல்பட்டால் உலகளவில் இந்திய நாட்டின் மதிப்பு மற்றம் நம்முடைய பொருளாதாரம் உயர வழிவகுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், ஸ்ரீசாய்ராம் கல்லூரி மாணவர்களுக்கான இணையதளம் சேவையை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர், நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் அனைத்து துறைகளிலும் சிறப்பிடம் பெற்ற 130 மாணவர்களுக்கு மொத்தம் ரூ25 லட்சம் மதிப்புள்ள தங்கப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் 822 மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டங்களும், 281 மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டங்களும் வழங்கப்பட்டன.

ஸ்ரீPசாய்ராம் கல்விக் குழுமங்களின் தலைவர் லியோ முத்து,முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து,அறங்காவலர் ஷர்மிளா ராஜா,முதல்வர் சி.வி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.எஸ்.மாந்தா கூறியது:- புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக கூடுதலாக 2 மாதகாலம் அவகாசம் கோரியுள்ளோம்.

நாடு முழுவதும் புதிதாக பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக் கோரி வந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து 100 கல்லூரிகளுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் படிப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள கல்லூரிகளுக்கு உரிய அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

 
 
 
 

0 comments:

Pageviews