Superstar Rajini Wishes a Fan Couples Photos
சூப்பர் ஸ்டார் வாழ்த்திய ஜோடி...
தெலுங்கில் பிரபலமான நடிகர் ராஜா. அதிரிபுதிரி ஹிட்டடித்த ஆனந்த், வெண்ணிலா, ஆ நலுகுறு போன்ற படங்களின் நாயகனான ராஜா கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் கண்ணா, ஜெகன் மோகினி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சந்திரமௌலி -உமா சந்திரமௌலி ஆகியோரின் அண்ணன் மகனும் நடிகருமான ராஜாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரெடெரிக் வின்சென்ட்- கமலினி வின்சென்ட் அவர்களின் மகளான அம்ரிதாவுக்கும் மார்ச் 3ஆம் தேதி சென்னையில் ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் வைத்து பெற்றோர்களால் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏப்ரல் 25 ஆம் தேதி திருமணம் சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மணமகளின் தந்தையான பிரெடெரிக் வின்சென்ட் தனது நீண்டகால நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை திருமணத்திற்கு அழைப்பதற்காக போயஸ்கார்டனில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். மணமக்களை ஆசிர்வதித்ததோடு திருமணத்திற்கு வந்தும் வாழ்த்துவதாக உறுதியளித்தார் சூப்பர் ஸ்டார்..
தன் நண்பரோடு உள்ள பழைய நினைவுகளையும் நட்பையும் பகிர்ந்து கொண்டார். அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு நலம் விசாரித்ததும், அவரை ஆரத்தழுவிக் கொண்டதும் நெகிழ்வாக அமைந்தது.
அதுதான் சூப்பர் ஸ்டார். என்றும் பழைய நட்பை மறக்காத பண்பாளர்.
0 comments:
Post a Comment