விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் 'விக்கல்ஸ்' விக்ரமின் 'லைட் வெயிட் பேபி

   
'பிக் பாஸ்' பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.          
          
இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் 'லைட் வெயிட் பேபி ' திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் - ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். பின்னர் இந்தப் படத்தின் படத்தொகுப்பாளராக ஹரிஷ் கோமே பணியாற்றுகிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் சாகர் சந்தேஷ் இணைத்து தயாரிக்கிறார்கள்.          
          
இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நிலையில்... தற்போது இப்படத்தின் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, மொத்த படப்பிடிப்பில் 60% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.‌           
          
ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் - பிட்னெஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக இணைந்து இருப்பதால்... படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌ இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

0 comments:

Pageviews